ஒரு பாடலை ரசிகர்கள் எந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதற்கான அளவு கோலாக இந்தக் காலத்தில் யு டியூப் பார்வை கணக்குதான் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக அனிருத் இசையமைப்பில் வெளிவந்த ‘மாரி’ படப் பாடலான ‘டானு டானு…’ பாடல்தான் யு டியூபில் 5 கோடியே 47 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
வேறு எந்த தமிழ் சினிமாப் பாடலும் 5 கோடியைக் கடக்காமல், கடந்த 3 வருடங்களாகவே 5 கோடி பார்வையைக் கடந்த ஒரே பாடல் என்ற சாதனையை அந்தப் பாடல் பெற்றிருந்தது.
இப்போது அந்தப் பாடலுக்குப் போட்டியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ படப் பாடலான ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 5 கோடி பார்வையைக் கடந்துள்ளது. சுமார் 6 மாத காலத்துக்குள் இந்தப் பாடல் 5 கோடி சாதனையைப் படைத்திருப்பது சிறப்பு.
விரைவில் ‘மாரி’ படத்தின் ‘டானு டானு’ பாடல் சாதனையையும் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.