இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்லாத இசையமைப்பாளர்கள்

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் புகழ் பெற்ற திறமையான இசையமைப்பாளர் இளையராஜா.

பல மொழிகளில் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா இன்று அவருடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

இளையராஜாவின் இன்றைய பிறந்தநாளுக்கு தமிழ்த் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் எந்த ஒரு வாழ்த்துச் செய்தியையும் வெளியிடவில்லை. இத்தனைக்கும் இவர்கள் அனைவருமே டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் அடிக்கடி பதிவுகளை இடும் இசையமைப்பாளர்கள்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் மட்டும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இன்று நள்ளிரவிலேயே அவருக்கு அழகான வாழ்த்துச் செய்தியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இசையின் கடவுளுக்கு மகிழ்ச்சியான இசை பிறந்தநாள். கற்பனைக்கு எட்டாத மேஜிக்கான இசையையும், இசையை மாற்றி எழுதியவரும், பின்னணி இசையை வழங்கியவருமான சாதனையாளர்.

உணர்வுகளின் இசைக் குறியீடுகளால் நம்முடைய இதயம், மனம் ஆகியவற்றைத் தொட்டவர். உத்வேகம் தந்தவர். ஒரே ஒரு இளையராஜா சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு இசையமைப்பாளருக்கு இருக்கும் உணர்வு இங்குள்ள தமிழ் இசையமைப்பாளர்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியம்தான்.

Read Previous

இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்

Read Next

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்