கர்நாடகாவில் ‘காலா’ வெளிவரும் ?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

இதையடுத்து கர்நாடகாவில் காலா வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசியதால்தான் ‘காலா’ படத்தை வெளியிடத் தடை விதிக்கிறோம், அது மக்களின் எண்ணம் என்றும் சொல்லப்பட்டது.

மக்களின் விருப்பத்தை எதிர்க்க மாட்டோம் என கர்நாடகா முதல்வர் குமாரசாமியும் தெரிவித்திருந்தார்.

இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளிவருமா வராதா என்று அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிக்கு நெருக்கமான சில கன்னடத் தயாரிப்பாளர்கள் கர்நாடகாவில் ‘காலா’ படத்தை வெளியிட தீவிரமான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக, இன்று இரவோ அல்லது நாளை காலையே இந்த விவகாரத்திற்கு முடிவு கிடைத்துவிடும், அதனால் வரும் ஜுன் 7ம் தேதி கர்நாடகாவிலும் ‘காலா’ கண்டிப்பாக வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Read Previous

10வது விஜய் விருதுகள் வென்றவர்கள் விவரம்….

Read Next

பலருக்கு ரஜினிகாந்த் ஆக ஆசை – தனுஷ்

Most Popular