பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது.
இன்று ‘காலா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகைகள் ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், பலருக்கும் அடுத்த ரஜினிகாந்த் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.
‘காலா’, மக்களுக்காக, மக்களைப் பற்றிய படம். மிகவும் ஆராய்ச்சி செய்து வெளிப்படையாக எடுக்கப்பட்டுள்ள படம்.
தாராவி மக்களின் தினசரி பிரச்சினை, போராட்டம், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய படம்.
ஒதுக்கப்பட்ட மக்களைப் பற்றிய கதை இது. மக்களின் பிரச்சினைக்காகப் போராடும் ‘காலா’வாக ரஜினிகாந்த் சார் நடித்திருக்கிறார்.
40 ஆண்டுகளாக மக்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த்தை சிதைத்துப் பார்க்க சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது திரையுலகத்திற்கு வரும் பல நடிகர்களுக்கு அடுத்த ரஜினிகாந்த் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எப்போதும் ஒரே ஒரு ரஜினிகாந்த், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்.
இந்தியாவின் அடையாளம் ரஜினிகாந்த்,” என்று பேசினார் தனுஷ்.