‘காளி’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்க உள்ளார்.
அவர் நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. அடுத்து ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் ‘கொலைகாரன்’.
இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார்.
விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப், திவ்யா மூவீஸ் சார்பில் தயாரிக்க, விஜய் ஆண்டனியுடன் படித்த நண்பர் ஆன்ட்ரூ லூயிஸ் இப்படத்தை இயக்குகிறார்.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.