போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் இணைந்து தயாரிக்க திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.
இந்தப் படத்திற்காக ஒரு குவிஸ் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் சமீபத்திய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு ஆன்ட்ராய்டு, ஐபோன்களில் டவுன்லோடு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆப்பில் திரைப்படம் தொடர்பான 10 எளிதான கேள்விகள் இருக்கும். அந்த 10 கேள்விகளுக்கான பதில்களை 2 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும்.
சரியான பதில்களை அளிப்பவர்களுக்கு கண்டிப்பாக பரிசுகள் உண்டு. ஒரு விவோ மொபைல் போன், பாஸ்ட் ராக் வாட்ச், டி ஷர்ட்ஸ் அல்லது படத்திற்கான டிக்கெட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
ஒரு படத்திற்காக மூவீ குவிஸ் அடங்கிய ஒரு மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்த ஆப் ஆன்ட்ராய்டு, ஐபோன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விதத்தில் உள்ளது.
எளிதில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்யலாம், யாரும் எளிதில் விளையாடலாம்.
டவுன்லோடு செய்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
ஒவ்வொரு நாளும் கேள்விகளும், வரிசைகளும் மாறிக் கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த குவிஸ் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற முடியும். மற்ற மாநிலங்களில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் குவிஸ் போட்டியை விளையாடலாம், ஆனால் பரிசுகள் கிடையாது.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு 10 கேள்விகளை 2 நிமிடங்களில் பதிலளித்தவர்கள் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
ஒரு முறை வெற்றி பெற்றவர் மறு முறை தேர்ந்தெடுக்கப்படமாட்டார்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தொடர்புக்காக அவர்களது வாட்ஸ் அப் மொபைல் எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.
வெற்றி பெறுபவர்களுக்கு இரண்டு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த மூவி குவிஸ் போட்டியில் 26 ஜுன் முதல் 6 ஜுலை வரை கலந்து கொள்ளலாம்.
இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் டிக்கெட்டை வாங்க வேண்டும், அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
படத்தின் தயாரிப்பாளர்களான போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா முடிவுகளே இறுதியானது.
Mobile App based Movie Quiz on Mr.Chandramouli – Download links
Android – https://play.google.com/store/apps/details?id=chanramouli.movie.com.mrchandramouli
I Phone – https://itunes.apple.com/us/app/mr-chandramouli-movie-quiz/id1387196210?ls=1&mt=8