முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.
இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.
அவர் விழாவில் பேசும் போது,
கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார். எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது.
கிராந்தி பிரசாத் தமிழ் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார். பிரச்சனைகள் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும்.
“பதினாறு வயதினிலே” படத்தில், நான் உதவி இயக்குநராக பணியாற்றிய போது படப்பிடிப்பு ரத்தாகி, மைசூரிலிருந்து ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது. நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் பூஜை தொடங்கிய உடன், பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி இருந்தது.
எனவே பிரச்சனை எல்லோருக்கும் தான் வரும். ஆனால் பிரச்சனைக்குப் பிறகு, வரும் வெற்றியே முழுமையான வெற்றி ஆகும். வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும் என கிராமத்தில் சொல்வார்கள். விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு? வறட்டி எதுக்கு? என்பார்கள் .படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. ” என்றார்.
விழாவில் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது,
“இது புதுமுகங்கள் நடித்த படம். புதுமுகங்கள் என்றால், யாரும் வாங்க முன் வருவதில்லை. கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள்ளார்கள்.இன்று பிரபலமாக இருக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே ?” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கெளதமி, ஷிவானி, அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன், எடிட்டர் கிராந்தி குமார் ,தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.