மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
படத்திற்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பும் பட அறிவிப்பிற்காக அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரையும் பார்க்கும் போது இந்தப் படம் நிச்சயம் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தை ‘அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.