எனக்கு நானே போட்டி – சிவகார்த்திகேயன்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி மற்றும் பலர் நடிக்கும் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன்,

“இந்த டிரைலரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் ‘பாகுபலி’ மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அதைவிட எங்களுக்கு வேறு பெருமை கிடைய்து.

இயக்குனர் பொன்ராம் கதை சொல்லும் போதே எனக்கு பல இடங்களில் புல்லரிக்க வைத்தது.

படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் கடந்து இந்தப் படத்தை இயக்குனர், ஒளிப்பதிவாளிர், இசையமைப்பாளர் ஆகியோரின் குழுக்கள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இந்தப் படத்துல நான் ஒரு தமிழ் மன்னனா நடிச்சிருக்கிறது பெருமையா இருக்கு. அதுக்காக நிறைய மாறினேன். அந்தக் கதாபாத்திரத்தில் சில வசனங்கள் பேசும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படம் முழுவதும் சூரி இருக்கிறார். அதனால், படத்தில் முழுமையான காமெடி இருக்கிறது. இது ஒரு முழு என்டர்டெயின்ட் படமா இருக்கும்.

எனக்கு எப்போதுமே நானேதான் போட்டி. எல்லாருடைய படங்களையும் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். அவர்கள் இருக்கும் இந்தத் துறையில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷம். அனைவரையும் மதிக்கிறேன், யாரைப் பார்த்தும் போட்டியும், பொறாமையும் இல்லை.

எனக்குக் கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை இன்னும் எப்படி சிறப்பா காட்டலாம் என்றுதான் முயற்சி செய்து வருகிறேன்.

குழந்தைகளும் நல்லா ரசிக்க வேண்டும் என பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம்,” என்றார் சிவகார்த்திகேயன்.

‘சீமராஜா’ வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

Seemaraja – Official Trailer

Read Next

‘யு டர்ன்’, கதைதான் ஹீரோ – சமந்தா