ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நோட்டா’.
இந்தப் படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொன்டா தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.
ஹைதராபாத்தில் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொன்டா,
“இந்த ‘நோட்டா’ படத்தைப் பார்த்த பிறகு எதிர்காலத்தில் வர இருக்கும் தேர்தலில் மக்கள் ‘நோட்டா’ பட்டனை அழுத்துவார்கள். தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக எங்களது படம் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அவை எதுவுமே உண்மையில்லை. இருப்பினும் இந்தப் படம் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். அரசியல் மீதான மக்களின் அணுகுமுறையை இந்தப் படம் மாற்றும்,” என்றார் விஜய் தேவரகொன்டா.