96 பார்த்து பாராட்டிய ‘பாகுபலி’ ராணா

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான ‘96’ படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கியுள்ளார். தெலுங்கு ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதனிடையே, ‘பாகுபலி’ பட வில்லன் ராணா டகுபட்டி, ‘96’ படத்தைப் பார்த்து ரசித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

“ஒரு காதல் கதை சிறந்த நடிப்பாற்றல் உள்ளவர்களுடனும், சிறந்த கலையுணர்வுடனும் சொல்லப்பட்டுள்ளது,” எனப் பாராட்டியுள்ளார். த்ரிஷாவுக்கு தனியாக ‘நீங்கள் மிகச் சிறந்த பார்ம்-ல் இருக்கிறீர்கள்,” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராணா இந்தப் படத்தை பார்த்து பாராட்டியதை அடுத்து, ‘96’ தெலுங்கு ரீமேக்கில் ராணா நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

Read Previous

‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவினரே வெளியிட்ட ‘டிரோல்’ போஸ்டர்

Read Next

‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி