பிரபாசின் பிரமிக்க வைக்கும் ‘சாஹோ’

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் இந்த ஆண்டு அவரது பிறந்த நாளான இன்று அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹோ’ திரைப்படத்தின் “Shades of Saaho” எனும் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சாஹோ” மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது “Shades of Saaho” காட்சி தொகுப்பு.

பெரிய பட்ஜெட் படமான “சாஹோ” படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடிக்கின்றனர்.

சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் ஆகியோர் UV கிரியேஷன்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

சங்கர்-எசான்-லாய் கூட்டணி இப்படத்திற்கு இசையமைக்கிறது. மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Read Previous

Shades Of Saaho – Chapter 1 – Video

Read Next

நல்ல படங்கள் வரிசையில் ‘ஜருகண்டி’ சேரும் – நிதின் சத்யா