சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்த தீபாவளிக்கே படம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்கள்.
இதுவரை இந்தப் படத்தின் இரண்டு பார்வைகள் வெளிவந்துள்ளன. இரண்டுமே பரவலாக விமர்சிக்கப்பட்டன.
சிவா, அஜித் ஆகியோர் “வீரம், வேதாளம், விவேகம்” படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்தது அஜித் ரசிகர்களுக்கு அவ்வளாகப் பிடிக்கவில்லை.
‘வேதாளம்’ படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும, ‘விவேகம்’ படம் மோசமான தோல்வியைத் தழுவியதே அதற்குக் காரணம்.
‘விஸ்வாசம்’ படத்தை பெரிய வெற்றிப் படமாகக் கொடுத்தால் மட்டுமே அஜித் ரசிகர்களின் கோபத்தில் இருந்து சிவா தப்பிக்க முடியும்.
அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. pic.twitter.com/CwFwQxbaC0
— Vetri Palanisamy (@vetrivisuals) November 9, 2018