‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து படத்திற்கு இன்று மறு தணிக்கை நடந்தது. மறு தணிக்கையில் 5 வினாடி காட்சி மற்றும் 4 வசன மியூட் ஆகியவை மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
மிக்சி, கிரைண்டரை தீயில் தூக்கிப் போடுவது நீக்கம்…
கோமளா, கோமளவல்லி ஆகிய பெயர் வரும் காட்சிகளில் ஆடியோ மியூட்…
பொதுப்பணித்துறை, 56 வருஷம் ஆடியோ மியூட்…
ஆகியவை மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. படத்தில் பல அரசியல் காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மேலே சொன்னவை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறு தணிக்கை செய்யப்பட்டதைத் தொடர்ந்து படக் காட்சிகள் இன்று மதியம் முதல் நடைபெற்று வருகின்றன.
