தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் நடிகர் விஷால்.
தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு விஷால் உறுதியளித்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.
ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
விஷால் ஒரு கிராமத்தையே தத்தெடுத்து அந்த கிராமத்தை மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.
இது போல் மேலும் பலர் செய்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு புத்துயிர் கிடைக்கும்.