விஸ்வாசம், கன்னடத்தில் ‘ஜக மல்லா’

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்து வெற்றிகரமாக வசூலித்த படம் ‘விஸ்வாசம்’.

இப்படத்தை கன்னடத்தில் ‘ஜக மல்லா’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.

கன்னடத்தில் கடந்த பல வருடங்களாகவே வேற்று மொழிப் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவது தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது.

இந்தியப் போட்டிகள் ஆணைக் குழு தலையிட்ட பின் அந்தத் தடையை விலக்கினார்கள்.

ஏற்கெனவே அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரிலும், ‘ஆரம்பம்’ படம் ‘தீரா’ என்ற பெயரிலும், ‘விவேகம்’ படம் ‘கமேண்டோ’ என்ற பெயரிலும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இப்போது நான்காவது படமாக ‘விஸ்வாசம்’ படம் ‘ஜக மல்லா’ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வருகிறது.

விரைவில் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

பாலா இயக்கிய ‘வர்மா’ வெளிவராது என அறிவிப்பு

Read Next

‘ஐரா’ – நயன்தாராவா இது ?