பஞ்சவர்ணம் பிலிம்ஸ் தயாரிப்பில், கிருஷ்ணபாண்டி இயக்கத்தில், பிரசன்னா இசையமைப்பில், ரெஜித் மேனன், ராதிகா பிரீத்தி, சந்திரளெமலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எம்பிரான்’.
நாளை மார்ச் 22ம் தேதி வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,
“முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதல், நகைச்சுவை ஆகியவைதான் இந்த ‘எம்பிரான்’. திரைக்கதை முற்றிலும் மாறுபட்ட ஒன்று. வசனங்களைக் காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையைக் கொண்டு சென்றுள்ளோம்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி காதலை சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ரெஜித் மேனன் விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் அறிமுகமானவர். படத்திற்கு இசையமைத்துள்ள பிரசன்னா ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திற்கு இசையமைத்தவர். பின்னணி இசை இந்தப் படத்திற்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளது,” என்கிறார் இயக்குனர்.