ஸ்டுடியோக்களுக்கு மாறும் ‘விஜய் 63’ படப்பிடிப்பு

‘தெறி, மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்க, அட்லி இயக்கும் விஜய் 63-வது படத்தின் படப்பிடிப்பு இனி மேல் ஸ்டுடியோக்களில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார்கள். அப்போது விஜய்யைப் பார்க்கவும், படப்பிடிப்பைப் பார்க்கவும் பெரும் கூட்டம் திரண்டது. அதனால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது.

எனவே, இனி நடைபெற உள்ள படப்பிடிப்புகளை சென்னையில் உள்ள ஈவிபி மற்றும் பின்னி மில் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்க உள்ளார்களாம்.

ஏற்கெனவே, சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாகப் போட்டு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அது போலவே, வெளிப்புறக் காட்சிகளையும் ஸ்டுடியோக்களுக்குள்ளேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

தெலுங்கில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

Read Next

இன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’