சூப்பர் சிங்கர் 7, ஏப்ரல் 27 முதல் ஆரம்பம்

தமிழ் தொலைக்காட்சிகளில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி இருந்து வருகிறது.

15 வயதுக்குட்பட்டவர்களுக்காக ஜுனியர் சீசனையும், 15 வயது மேற்பட்டவர்களுக்காக சூப்பர் சிங்கர் சீசனையும் நடத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்புதான் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’ நிகழ்ச்சி முடிவுற்றது. ஜுனியர் முடிந்ததால், அடுத்து ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் 7வது சீசனை ஆரம்பிக்க உள்ளார்கள்.

வரும் ஏப்ரல் 27 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த 7வது சீசனில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இணைந்து சிறப்பிக்க உள்ளார்.

நடுவர்களாக பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் இருக்கப் போகிறார்கள்.

நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்த ரவிந்தாக்ஷன், செந்தில் கணேஷ் ஆகியோர் இதற்கு முந்தைய சீசன்களில் வெற்றியாளர்களாகி உள்ளார்கள்.

உலக அளவில் இசைப் பிரியர்கள் ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்ட ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி 7வது சீசனிலும் பல ஆச்சரியங்களைத் தரக் காத்துக் கொண்டிருக்கிறது.

Read Previous

கொலைகாரன் – டிரைலர்

Read Next

Gurkha Official Teaser

Most Popular