பாக்யராஜ் நடிக்கும் ‘எனை சுடும் பனி’

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எனை சுடும் பனி’.

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும், ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர். இந்த படம் மூலம் கதாநாயகனாக உயர்வு பெறுகிறார்.

கதாநாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள். கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.

படத்தின் துவக்க விழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது.

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவா கூறியதாவது,

“சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரசியம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் மற்றொரு சுவாரசியம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது,” என்றார் இயக்குனர்.

Read Previous

Gurkha Official Teaser

Read Next

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 26, 2019 வெளியான படங்கள்