தண்ணீர் பிரச்சினையைத் தொடாத ‘தண்ணி வண்டி’

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் ஜி.சரவணன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தண்ணி வண்டி’.

ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தம்பி ராமையா மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, ‘வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறுகையில்,

“தற்போதுள்ள தண்ணீர் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை, நீர் நெருக்கடியைப் பற்றியதும் அல்ல.

எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை

மாவட்ட அருவாய் அதிகாரி கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்ட ஒரு கதாபாத்திரமாகும். குறிப்பாக சக்தி வாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது. கடைசியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்,” என்றார்.

இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Previous

25 கோடியில் படம் தயாரிக்கத் தயாராகும் ஆர்கே

Read Next

‘ஆடை’ வெளியானதும் அனைவர் பார்வையும் மாறும்