பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் படம் ‘V 1’.
“வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ்” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாவல் நவகீதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மற்றும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிலருக்கு கூட்டத்தைப் பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் அதைவிட பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.
கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலை பார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ‘V 1’ என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் அந்த கொலைக்கான மர்மத்தையும், கொலைகாரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே படத்தின் கதை.
இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பாகவும், காட்சிக்குக் காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
விரையில் வெளியாகவுள்ள ‘V 1’ படப்பிடிப்பு முற்றிலுமாக சென்னையில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.