நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.