தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

ஒய்நாட் ஸ்டுடியோஸ் அவர்களது 18வது படமாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இது. தனுஷ் நாயகனாக நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும், கார்த்திக் சுப்பராஜ், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கப் போய்விட்டார்.

கேங்ஸ்டர், திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில வெற்றிப் படங்களில் நடித்தவர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படத்தில் பங்கு பெற உள்ள மற்ற நட்சத்திரங்கள், தொழிட்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரையிலேயே வெளியிடப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இப்படத்தை முழுவதுமாக இங்கிலாந்தில் படமாக்க உள்ளார்கள்.

Read Previous

நியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’

Read Next

கலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது