ஆகஸ்ட் 1-ல் வெளியாகும் ‘கழுகு 2’

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் 2012ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’.

ஏழு வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகமான கழுகு 2 அதே கூட்டணியில் மீண்டும் உருவாகி உள்ளது.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடுகிறது.

‘கழுகு’ படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, ‘கழுகு 2’ படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப் படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Read Previous

குறும்படங்களுக்காக பிரத்யேக செயலி ‘Shortflix’

Read Next

தமிழ் சினிமா – இன்று ஜுலை 26 வெளியான படங்கள்…