7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அதிதிராவ் ஹைதரி கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் மூலம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத, ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. பூஜையில், விஜய் சேதுபதி, அதிதிராவ் ஹைதரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப், விஜய் சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.