இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் ‘மேயாத மான், மெர்க்குரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படத்தை இன்று ஆரம்பித்துள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். படத்தின் நாயகியாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த வருடம் வெளியான ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு தமிழில் இப்போதுதான் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று அடுத்த ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள்.