அஜித், வினோத் கூட்டணியின் ‘வலிமை’

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிட்டு படத்தை பூஜையுடன் இன்று ஆரம்பித்துள்ளார்கள்.

இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்துடன் மீண்டும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திலும் இணைந்திருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றியும் மற்ற நட்சத்திரங்களைப் பற்றியும் இன்னும் அறிவிக்கவில்லை.

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 

Read Previous

ஓ மை கடவுளே – டீசர்

Read Next

கைதி, எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் – நரேன்

Most Popular