கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படம் ‘கபடதாரி’.
இப்படத்தில் சிபிராஜ், நந்திதா நாயகன், நாயகியாக நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘விஸ்வரூபம்’ பட நாயகி பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.
பல திருப்பங்களுடன் கூடிய திரில்லர் படம் கபடதாரி. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், இந்தத் திருப்பங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு என்கிறார் தனஞ்செயன்.
நவம்பர் 1ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பித்து, 2020 மார்ச் மாதம் உலகெங்கும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.