‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தம்பி’.

இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துளளார்.

‘பாபநாசம்’ படம் மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது.

இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளார்கள். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

சென்னை, மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படம் இயக்கி வெற்றி பெற்ற மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், நேரடி தமிழ்ப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

வருகிற 30ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.

Read Previous

சியான்கள் – ஏழு முதியவர்களின் வாழ்வியல் படம்

Read Next

சசிகுமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம்