தமிழரசன் – வீட்டில் பின்னணி இசை அமைக்கும் இளையராஜா

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் தமிழரசன்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இப்படத்தின் பின்னணி இசையை இளையராஜா அவருடைய வீட்டில் வைத்து உருவாக்கி வருகிறார்.

படத்தின் பின்னணி இசைக்கான அனைத்து வாத்தியக் கலைஞர்களையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, அங்கு பின்னணி இசையை லைவ்-ஆக பதிவு செய்து வருகிறார்.

2020-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பின்னணி இசை கொண்ட படமாக ‘தமிழரசன்’ இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

காட் ஃபாதர் – டிரைலர்

Read Next

சைக்கோ – நீங்க முடியுமா….பாடல்