மரகத நாணயம் 2 – முதல் பார்வை வெளியீடு

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சாபமிடப்பட்ட மரகதக் கல், ஆவிகள், நகைச்சுவை மற்றும் சாகசம் கலந்த கதைக்களத்துடன் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் இயக்குநர் ARK சரவணன் இப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார்.

இரண்டாம் பாகத்தில் ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனி போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ், முருகானந்தம் உள்ளிட்ட முதல் பாகத்தின் பெரும்பாலான நடிகர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ARK சரவண் கூறுகையில், “முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த நகைச்சுவை, சாகசம் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், அனைத்து கதாபாத்திரங்களும் கதையில் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் இந்தப் பாகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டார்.

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா நிறுவனங்கள் சார்பில் தயாரித்துள்ளனர்.

Read Previous

ரெஜினா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’

Read Next

அப்பா குட்டி – பத்திரிகையாளர் சந்திப்பு