நடிகர் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘கிங் 100’. தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.
நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்டத்தில் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் முதல் பார்வை போஸ்டரை, அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை என். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.
நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள ‘கிங் 100’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.