‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘டெத் ரயில்வே’. தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944-ஆம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தில், இந்திய வீரர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வரலாற்றுப் பின்னணியுடன் போர் மற்றும் காதல் அம்சங்களும் கதையில் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுகிறார்.
ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார்.
சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சியையும், சரவணன் ராமச்சந்திரன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். டி.எஸ். ஹரி ஹர சுதீன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். கே.சி. பூபதி ராஜா ஒலி கலவைப் பணிகளைக் கவனிக்கிறார். நெய்தல் பாடல்களை எழுத, ஸ்ரீ நிஷா ஆடை வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பராஜிதர் கலரிஸ்டாகப் பணியாற்றுகிறார்.
பி.ஜே. ஆகாஷ், வெங்கி சந்திரசேகர் ஆகியோர் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாகவும், குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றுகின்றனர். நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.