பிரபாஸின் ‘பௌசி’ முன்னோட்டம் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில், ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பௌசி’ திரைப்படத்தின் ‘பைல் நம்பர் 25’ என்ற புதிய முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், 2027 மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, ரவிசங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபாஸ் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இமான்வி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்கரபோர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும், அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் பீரியட் ஆக்‌ஷன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Read Previous

சிங்காரம் – டிரைலர் வெளியீட்டு விழா

Read Next

குட் நியூஸ் – படப்பிடிப்பு நிறைவு