ஜீவாவின் ‘தகப்பன்’ – டிசம்பர் 24 ரிலீஸ்

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

ரா. வெங்கட் இயக்கும் இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பின்னணியில், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘TTT’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீவா நடிக்கும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். M. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். K.B. நந்தபாலன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

Read Previous

‘மைலோ’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

Read Next

ருக்மிணி வசந்த் நடிக்கும் புதிய படம்