லவ் அண்ட் வார் – முதல் பார்வை வெளியீடு

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. ரன்பீர் கபூர் – ஆலியா பட் – விக்கி கவுஷல் ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் இந்தப் படைப்பு, ரசிகர்களுக்குத் தனித்துவமான திரைப்பட விருந்தாக எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரன்பீர் கபூர் இடம் பெற்றுள்ள பிரமிக்க வைக்கும் முதல் போஸ்டரில் பன்சாலியின் உலகத்தைப் பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அடுத்து இரண்டாவது போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திரையரங்குகளில் காதல் மற்றும் உணர்ச்சிகரமான கதை அம்சத்தை பன்சாலி ஜீவனுள்ளதாக உருவாக்குவதைக் காண்பது என்பது எப்போதும் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பிரம்மாண்ட படைப்பிற்கான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல் ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘லவ் & வார்’ திரைப்படம், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

ஏழு கடல் ஏழு மலை – முன் வெளியீட்டு விழா

Read Next

அப்போலோ மருத்துமனை – புதிய பொறுப்பில் உபாசனா