மொத ராத்திரி – படப்பிடிப்பு நிறைவு

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தயாரித்து வரும் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ராஜா கருப்பசாமி இயக்கும் இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

படம் பற்றி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,

“ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது,

“மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்,” என்றார்.

Read Previous

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யாவின் 48வது படம்

Read Next

ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

Most Popular