தேவிஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

தில்ராஜு பெருமையுடன் வழங்கும் தேவி ஸ்ரீ பிரசாத் நயாகனாக அறிமுகமாகும் பான் இந்தியா திரைப்படம் ‘எல்லம்மா’

தெலுங்கில் ‘பலாகம்’ படத்தை இயக்கிய வேணு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சிரிஷ் தயாரிக்கிறார்.

அறிமுக படத்திலேயே தேசிய விருது பெற்று பாராட்டு பெற்ற வேணு, இந்த முறையும் ஆழமான சக்தி மற்றும் ஆன்மீகத் தன்மை கொண்ட கதையுடன் புதிய படம் இயக்குகிறார். 

சினிமாவில் பல ஆண்டுகளாக இசைத்துறையில் தனது இசை மூலம் ரசிகர்களை மகிழ்வித்த தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது முதன்முறையாக ஹீரோவாக திரையில் அறிமுகமாகிறார். நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவரது ஹீரோ அறிமுகம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தனது இயல்புக்கும் எனர்ஜிக்கும் ஏற்ற கதையாக தேர்வு செய்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் இசையையும் தேவிஸ்ரீ பிரசாத் அமைக்கிறார்.

‘எல்லம்மா’ தெய்வீக சக்தியை மையமாகக் கொண்டு, நாட்டுப்புற மரபுகள் மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகளின் பின்னணியில் உருவாகும் படம். மகர சங்கராந்தி என்ற புனித நாளில் படத்தின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் ஆழமாக ஊன்றிய சக்திவாய்ந்த கதை என்பதை உறுதிப்படுத்துகிறது. 

‘எல்லம்மா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

Read Previous

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் ‘கான் சிட்டி’

Read Next

‘திருவாசகம்‘ முதல் பாடலை இசையமைத்து வெளியிடும் ஜிவி பிரகாஷ்குமார்

Most Popular