தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான பேமிலி எண்டர்டெயினராக உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்
இப்படத்தில் அர்ஜூன் தாஸ், ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த அன்னா பென், யோகிபாபு ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார்.
இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறா.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்