‘விஜய் 69’ படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து டிவிவி நிறுவனம் விலகியுள்ளது.
’கோட்’ படத்திற்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படத்திற்கு திரைக்கதை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதலில் இந்தப் படத்தினை ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தானயா தயாரிக்க முன்வந்தார்.
தற்போது ‘விஜய் 69’ படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து டிவிவி நிறுவனம் விலகியிருக்கிறது. இப்போது தயாரிப்பு பொறுப்பினை யார் ஏற்றுக் கொள்ளவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனால் பணிகள் எதுவும் பாதிக்கக்கூடாது என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தினை முடித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்கவுள்ளார் விஜய். இதனை முன்வைத்து தயாரிப்பு பொறுப்பினை ஏற்றுக் கொள்ள பலரும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. விஜய் படம் என்பதால் விரைவில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய்யின் சம்பளத்தினை முன்வைத்தே தயாரிப்பில் பொறுப்பிலிருந்து டிவிடி நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.