ஜி.வி.பிரகாஷை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசைக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’.  சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். ‘கேப்டன் மில்லர்’ படமும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், வசூல் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனிடையே, ‘கேப்டன் மில்லர்’ படத்தினை சமீபத்தில் பார்த்துவிட்டு ஜி.வி.பிரகாஷிற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே குடும்பம் தான் என்றாலும், முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்திருப்பதால் மிகவும் சந்தோஷமடைந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இசையமைப்பாளரான 17 ஆண்டுகளில் முதன் முறையாக ’கேப்டன் மில்லர்’ படத்துக்கு தான் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று ஜி.வி.பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

Read Previous

அமீகோ கேரேஜ் படத்தில் வேலை பார்த்த அனைவரும் பணத்திற்காக வேலை செய்யவில்லை – மாஸ்டர் மகேந்திரன்

Read Next

ஓடிடி உரிமை விற்பனையாகாத ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, காரணம் என்ன ?