ஓடிடி நிறுவனங்களைச் சாடிய கங்கணா

பில்கிஸ் பானு குறித்த கேள்விக்கு, ஓடிடி நிறுவனங்களைச் சாடியுள்ளார் கங்கணா.

குஜராஜ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்தது. இந்த முடிவினை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்துடன் ரத்து செய்தது. இந்த தீர்வு இந்தியளவில் பேசப்பட்டது.

பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் கங்கணாவை மேற்கொளிட்டு ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதலளிக்கும் வகையில் கங்கணா கூறியிருப்பதாவது:

“பில்கிஸ் பானுவின் கதையை படமாக எடுக்க விரும்புகிறேன். 

என்னிடம் கதையும் தயாராகவே உள்ளது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அரசியல் ரீதியிலான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு பதில் எழுதியுள்ளனர்.

மேலும், கங்கணா பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று ஜியோ சினிமா கூறிவிட்டது. ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.

Read Previous

ஜாவத் அக்தருக்கு ‘அனிமல்’ படக்குழுவினர் பதில்: திரையுலகினர் அதிர்ச்சி

Read Next

என் பிறந்தநாளைக் கண்டாலே பயம் கொள்ளச் செய்கிறது: யஷ் உருக்கம்