தக்ஸ் திரைப்படத்தைக் கைப்பற்றிய சோனி மியூசிக்

பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. 

'மும்பைகார்' என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

'தக்ஸ்' திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ் காந்த், சரத் அப்பானி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஹிருது ஹாரூன் முதன்மை பாத்திரத்தில் இப்படம் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இசையை கைப்பற்றியுள்ளது சோனி மியூசிக்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் டிசம்பர் 2022-ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

தொழில் நுட்பக் குழுவினர்:
இயக்கம் : பிருந்தா 
தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் – ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் – யுவராஜ்
இணை இயக்குனர்: ஹரிஹரகிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (Aim) 

Read Previous

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடியின் காதல் அறிவிப்பு

Read Next

5 மொழிகளில் சுதீர் பாபு நடிக்கும் “ஹரோம் ஹரா”