சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் தமிழ்ப் படம்

ஹிந்தித் திரையுலகின் பரபரப்பான கிளாமர் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய யுவன் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சக்தி, மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகுமார் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் யுவன் கூறுகையில்,

“நான் இயக்கிய ‘சிந்தனை செய்’ படத்திற்கு அப்போது நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் தெலுங்கில் ‘கதர்னாக், ரணம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதினேன்.

தற்போது இப்படம் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளேன். இந்தப் படம் ஒரு ஹாரர் காமெடி. இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின் நடித்தால் அக்கதாபாத்திரத்திரத்திற்கு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். படம் வரும் போது ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள்.

படத்தில் வித்தியாசமான நாயகனாக சதீஷ் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத், முன்னா ஆகியோரும் நடிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் மும்பையில் 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது,” என்றார்.

Read Previous

புதிய படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின்

Read Next

ஏப்ரல் 20ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular