‘வலிமை’ படத்தை அடுத்து போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
ஹிந்தியில் வெளிவந்த ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். பத்து நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு இன்று படக்குழுவினல் மறைந்த நடிகர் விவேக் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
பேவியூ புரொஜக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தைத் தயாரிக்கிறார்.