நா.முத்துக்குமார் பிறந்தநாளில் அவரது மகன் எழுதிய கவிதை

தமிழ் சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். 

சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இயற்கை எய்தினார். 

அவரது மகன் ஆதவன். பத்து வயதை மட்டுமே கடந்துள்ள ஆதவன் இன்று தன் அப்பா நா.முத்துக்குமார் பிறந்தநாளில் அப்பாவைப் பற்றிய எழுதிய கவிதை அனைவரது பாராட்டுக்களையும் பெற்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சினிமாவிற்கு பாடல்கள் எழுதுவதற்கு முன்பு பல கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் நா.முத்துக்குமார். திரைப்படப் பாடல்களிலும் அவருடைய கவிதையான வரிகள்தான் அவருக்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொடுத்தது.

முத்துக்குமாரின் மகன் ஏற்கெனவே நோட்டுப்புத்தகத்தில் எழுதிய கவிதை ஒன்று இதற்கு முன் பரவலாகப் பகிரப்பட்டது.

இன்று ‘தந்தை’ என்ற தலைப்பில் ஆதவன் எழுதிய கவிதை…

என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

– மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

Read Previous

விதிகளை பின்பற்றுங்கள், அபிஷேக்பச்சன் வேண்டுகோள்

Read Next

டிவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள், விஜய் சேதுபதி நன்றி