விஜய் டிவி – ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகள் மீண்டும் ஆரம்பம்

2020 மார்ச் மாதக் கடைசியில் கொரானோ தொற்று இந்தியாவில் பரவியது. அதையடுத்து சினிமா படப்பிடிப்புகள், டிவி தொடர் மற்றும் நிகழ்ச்சி படப்பிடிப்புகள் ஆகியவை நிறுத்தப்பட்டன.

இதனால், பல டிவிக்களில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து தொடர்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பதிலாக பழைய தொடர்களையும் பிரபலமாமன சில நிகழ்ச்சிகளையும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வந்தார்கள்.

படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பின் அரசும் அனுமதி கொடுத்தது. அதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவி தனது நெடுந்தொடர்களையும், வழக்கமான நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் முதல் புதிய அத்தியாயங்களுடன் ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, காற்றின் மொழி, ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி” ஆகிய தொடர்கள் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளன.

Read Previous

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்த படங்கள்

Read Next

விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, புத்தம் புதிய தொடர்