நெட்பிளிக்ஸில் வெளியானது ‘ஆர்கே நகர்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் ஆறு படங்கள் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.

ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படமும் அதே போல் வெளியாகப் போகிறது என்ற செய்தி திரையுலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்குள்ளாக ‘ஆர்கே நகர்’ என்ற திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் வெங்கட்பிரபுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

சரவணராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்டாப், அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை கடந்த வருடமே நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டு அடுத்த சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்கே நகர் படத்தின் டிரைலர்…

Read Previous

பாகுபலி, கனவு நனவானது – தமன்னா

Read Next

சொந்தமாக கேக் செய்து பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா

Most Popular