‘களவாணி’ படத்தில் அறிமுகமானாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 1 மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா.
அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை அவரே சொந்தமாக செய்த கேக் மூலம் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார்.
கொரானோ ஊரடங்கால் கேக் வாங்க கடைகள் எதுவுமில்லை. அதனால், கொரானோ ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அவர்களே சொந்தமாக கேக் செய்து பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.
அது போலவே ஓவியாவும் இன்று பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து தன்னுடைய இன்றைய பிறந்தாளை சிறப்பிக்க வைத்துவிட்டீர்கள் என மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
Tags: oviya oviya army